Homeசெய்திகள்சினிமா5-ம் ஆண்டில் பேட்ட படம்... நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்...

5-ம் ஆண்டில் பேட்ட படம்… நினைவுகளை பகிர்ந்த மாளவிகா மோகனன்…

-

கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படம் மூலம் தமிழில் களமிறங்கினார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் தனுஷூடன் இணைந்து நடித்து வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது விக்ரமின் தங்கலான் படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். படத்தில் த்ரிஷா, சசிகுமார், சிம்ரன், மேகா ஆகாஷ், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகை மாளவிகா மோகனன் படம் குறித்தும், ரஜினி குறித்தும் பேசியிருக்கிறார். அதில், பேட்ட படம்தான் தனது முதல் திரைப்படம். இதில் நடிக்க முக்கிய காரணம் ரஜினி சார் தான். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. முதல் நாள் படப்பிடிப்பின்போதே, அவரை கண்டதும் அனைவரும் அமைதியாகி விட்டதை நான் கவனித்தேன். எனது முதல் காட்சியே அவருடன் தான் என்பதால், அனைவரும் என்னிடம் நன்றாக பேசினார்கள். நான் பெரிய நடிகையாக வருவேன் என அவர் என்னை ஊக்குவித்தார் என மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.

MUST READ