Homeசெய்திகள்சினிமா'7ஜி ரெயின்போ காலனி' மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்..... சோனியா அகர்வால்!

‘7ஜி ரெயின்போ காலனி’ மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்….. சோனியா அகர்வால்!

-

சமீபகாலமாக பல பெரிய ஹீரோக்களின் படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு, 3 போன்ற படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவித்த நிலையில் அடுத்ததாக விஜயின் கில்லி படமும் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தியேட்டர்களில் குத்தாட்டம் போட வைத்தது. மேலும் பில்லா, தீனா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.7ஜி ரெயின்போ காலனி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்..... சோனியா அகர்வால்! இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

நடிகை சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் கோவில், மதுர, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் இவர் நடித்திருந்த 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த அளவில் கிடைப்பதில்லை. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டியில் இது தொடர்பாக பேசியிருக்கிறார். அப்போது அவர், “எனக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைன்ட் படத்தில் நடித்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் ஆகிய மொழிப் படங்களிலும் நடிக்கிறேன்” என்று கூறினார்.'7ஜி ரெயின்போ காலனி' மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்..... சோனியா அகர்வால்!

தொடர்ந்து பேசிய சோனியா அகர்வால், “7ஜி ரெயின்போ காலனி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். மேலும் நல்ல கதையாக இருந்தால் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ