Homeசெய்திகள்சினிமாஇந்தப் படத்துடன் எல்சியு - வை முடித்து விடுவேன்..... லோகேஷ் கனகராஜ் பேட்டி!

இந்தப் படத்துடன் எல்சியு – வை முடித்து விடுவேன்….. லோகேஷ் கனகராஜ் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் ட்ரெண்டிங் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்தப் படத்துடன் எல்சியு - வை முடித்து விடுவேன்..... லோகேஷ் கனகராஜ் பேட்டி!இந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தர அடுத்தது விஜயை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி மாஸ்டர் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தையும் தந்தார். அதன் பின்னர் விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதாவது லோகேஷ் கனகராஜ், சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய கைதி, விக்ரம் லியோ போன்ற படங்கள் எல்சியு – வின் கீழ் அடங்கும். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கி வரும் கூலி திரைப்படம் தனி படமாக உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து கைதி 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ், “நான் அடுத்தது கைதி 2 (LCU) திரைப்படத்தையும் ரோலக்ஸ் (Standalone) திரைப்படத்தையும் இயக்க இருக்கிறேன். அனேகமாக விக்ரம் 2 படத்துடன் எல்சியு முடிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.இந்தப் படத்துடன் எல்சியு - வை முடித்து விடுவேன்..... லோகேஷ் கனகராஜ் பேட்டி!

மேலும், “தளபதி விஜய் சார் விக்ரம் 2 படத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய சிந்தனை இப்போது வேற லெவலில் இருக்கிறது. அதை நாம் ஏற்று பாராட்ட வேண்டும். இல்லையென்றால் நான் லியோ 2 படத்தை இயக்கியிருப்பேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ