இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. அந்த வகையில் இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க அதில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி நல்ல இந்த படம் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி நீரீவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கனெக்ட் மீடியா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அதேசமயம் தனுஷ் இந்த படத்தில் இளையராஜாவாக நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் படத்தில் ஏ ஆர் ரகுமான், வைரமுத்து ஆகியோரின் கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இதுகுறித்து பேசியுள்ளார். “இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்ட உடனேயே அவரிடம் பேசினேன். யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது என்று கூறினேன். இது நல்ல படமாக வரும். தனுஷ் தன்னுடைய நடிப்பால் இந்த படத்தை வேறொரு பரிமாணத்தில் கொண்டு தனுஷ் தன்னுடைய நடிப்பால் இந்த படத்தை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்வார். மேலும் இளையராஜா பயோடிக் படத்தில் நிச்சயம் நான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.