Homeசெய்திகள்சினிமா'பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்'.... தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்’…. தென்காசி தனியார் பள்ளியில் KPYபாலா!

-

- Advertisement -

'பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்'.... தென்காசி தனியார் பள்ளியில் பாலா!நகைச்சுவை நடிகர் பாலா விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று புகழ்பெற்றார். மேலும் பல படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்'.... தென்காசி தனியார் பள்ளியில் பாலா!அதே சமயம் பாலா ஆதரவு பெற்றவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அதன்படி சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னுடைய சொந்த பணத்திலிருந்து 200 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாயை பிரித்துக் கொடுத்து உதவினார். பாலாவின் இந்த செயல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்குள் நீர் சூழ்ந்து, வீடுகள் இடிந்து விழுந்து தங்குவதற்கே இடமில்லாமல் குழந்தைகள், வயதானவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.'பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவேன்'.... தென்காசி தனியார் பள்ளியில் பாலா!

இந்நிலையில் தென்காசி தனியார் பள்ளியில் கலந்து கொண்ட பாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டேன். இப்போது தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பலரும் அடிப்படை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நான் அங்கு வெறும் கையோடு செல்ல விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டாயம் உதவுவேன்” என்று பேசினார். அப்போது பள்ளி மாணவ மாணவியர்கள் தாங்கள் வைத்திருந்த பணத்தை பாலாவிடம் நிதி தொகையாக கொடுத்தனர். ஆனால் அதனை வாங்க மறுத்த பாலா நீங்களே மக்களுக்கு நேரடியாக உதவுங்கள் என்று கூறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

MUST READ