Homeசெய்திகள்சினிமாஹெச். வினோத்தை கொலை செய்வேன்.... 'தளபதி 69'-ஐ நான்தான் இயக்குவேன்.... பார்த்திபன் பேட்டி!

ஹெச். வினோத்தை கொலை செய்வேன்…. ‘தளபதி 69’-ஐ நான்தான் இயக்குவேன்…. பார்த்திபன் பேட்டி!

-

பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தளபதி 69 படம் குறித்து பேசியுள்ளார்.ஹெச். வினோத்தை கொலை செய்வேன்.... 'தளபதி 69'-ஐ நான்தான் இயக்குவேன்.... பார்த்திபன் பேட்டி!

நடிகர் விஜய் தனது 68 ஆவது படமான கோட் திரைப்படத்திற்கு பிறகு தனது 69ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். படத்தினை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளதால் அவரது கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.ஹெச். வினோத்தை கொலை செய்வேன்.... 'தளபதி 69'-ஐ நான்தான் இயக்குவேன்.... பார்த்திபன் பேட்டி! அதில், “தளபதி 69 படத்தை நான்தான் இயக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அந்த வாய்ப்பை இயக்குனர் ஹெச். வினோத் தட்டி சென்றுவிட்டார். தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். ஹெச். வினோத்தை கொலை செய்துவிட்டு விஜயிடம் சென்று அவர் என்னுடைய உதவியாளராக பணியாற்றியவர்தான். அவர் இப்போது இல்லை. அதனால் உங்கள் படத்தை நானே இயக்குகிறேன் என்ற சொல்வேன்” என சிரித்துக் கொண்டே மிகவும் வேடிக்கையாக பேசியுள்ளார் பார்த்திபன்.

இதன் மூலம் திரைத்துறையில் விஜயின் கடைசி திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர்கள் பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

MUST READ