Homeசெய்திகள்சினிமாஅஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையை மறக்கவே முடியாது..... மகிழ் திருமேனி பேட்டி!

அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையை மறக்கவே முடியாது….. மகிழ் திருமேனி பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையை மறக்கவே முடியாது..... மகிழ் திருமேனி பேட்டி! இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்தின் ரேஸ் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, “விடாமுயற்சி படத்தை முடிப்பதற்கு முன்னதாக ரேஸிங்கிற்காக பயிற்சி மேற்கொண்ட வீடியோவை அஜித் சார் எங்களிடம் காட்டினார். பயிற்சியின்போதே இரண்டு முறை அவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்போதுதான் அஜித் சார் எங்களிடம், ‘ரேஸில் எனக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு முன்னதாக எல்லாத்தையும் நான் முடித்து விட்டு போகிறேன். ஏனென்றால் என்னை நம்பி இத்தனை பேர் இருக்கிறீர்கள்.

நான் ஆக்சிலேட்டரை மிதிக்கும் போது 100% இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கணும், எனக்கு இன்னும் கமிட்மெண்டுகள் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே 90% மட்டும் அக்சிலேட்டரை என்னால் மதிக்க முடியாது. அப்படி செய்ய நான் விரும்பவில்லை’ என்று கூறினார். அஜித் சார் சொன்ன அந்த விஷயத்தை இப்போது நினைக்கும் போது கூட கூஸ்பம்ஸாக இருக்கிறது. அந்த சமயத்தில் தான் துபாயில் அவருக்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அஜித் சார் ஒரு விஷயத்தில் இறங்கினார் என்றால் முழு மனதுடன் இறங்குவார். அதை டெடிகேஷன்-ஐ தான் அவர் நடிப்பிலும் ரேஸிலும் காட்டுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ