நடிகை மீனாட்சி சௌத்ரி தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்தாண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் மீனாட்சி சௌத்ரி. மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு இந்திய அளவில் பிரபலமான மீனாட்சி சௌத்ரி தற்போது தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார். இதற்கிடையில் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு மொழியை முன்னணியாக கொண்டு உருவாகி இருந்த நிலையில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில்தான் நடிகை மீனாட்சி சௌத்ரி , புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். அதாவது, இவர் தொடர்ந்து பல படங்களில் மனைவி கேரக்டரில் நடித்து வருவதால் சிலர் தன்னை ஆரம்பத்திலேயே மனைவி கேரக்டரில் நடிக்காமல் இருப்பது நல்லது என சொன்னதாகவும் இதன் காரணமாக இனி அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் முடிவு செய்துள்ளாராம். மேலும் புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார் மீனாட்சி சௌத்ரி.