நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் தொடரி, ரஜினி முருகன், அண்ணாத்த, சாமி 2, பைரவா உள்ளிட்ட படங்களில் ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் திரைத் துறையில் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதன்படி இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரகு தாத்தா எழுது திரைப்படம் வெளியானது. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றின் கீர்த்தி சுரேஷிடம் அஜித் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஆசை. ஆனால் அவருக்கு தங்கையாக நடிக்கவே மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -