தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தனுஷின் 52வது படமாக இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்து வருகிறார். ஆகாஷ் பாஸ்கரின் தயாரிப்பிலும், ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இவர்களுடன் இணைந்து ராஜ் கிரண், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
“#IdlyKadai has came out very well👌. Title has worked well. #ArunVijay sir doing villain & face off between #Dhanush & AV gonna be exciting🥵👊. 10% of foreign shoot left, so we postponed from Apr 10th🤝. Release date announcement in 10 days🤞”
– Producer pic.twitter.com/sj882fN4uZ— AmuthaBharathi (@CinemaWithAB) March 22, 2025
ஆனால் படப்பிடிப்பு முழுவதும் இன்னும் நிறைவடையாத பட்சத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய இப்படத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், நடிகர் அருண் விஜய் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் நடிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் தனுஷ் – அருண் விஜய் மோதும் காட்சிகள் பயங்கரமாக இருக்கும் எனவும் கூறி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார்.