பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி தமிழ் சினிமாவில் கடந்த 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, சுயம்வரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். மேலும் இவர் படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் கடந்த 2006 இல் வெளியான தலைநகரம் எனும் திரைப்படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு வீராப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
சுந்தர் சி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தலைநகரம் 2 என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர் சி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், குஷ்பூ என் வாழ்வில் வரவில்லை என்றால் இவருக்கு தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என பிரபல நடிகை ஒருவரை பற்றி கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமில்லை ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்து புகழ்பெற்ற மறைந்த நடிகை சௌந்தர்யா தான். இவர் காதலா காதலா, படையப்பா, சொக்க தங்கம் இந்த படங்களில் நடித்துள்ளார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்தவர். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..