நடிகர் மோகன்லால், நிர்வாணமாக நடிக்கலனா அந்த சீனுக்கே மதிப்பில்லை எனக் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வருபவர் மோகன்லால். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ராம், வ்ருஷபா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள மோகன்லால் த்ரிஷ்யம் 3 படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் எம்புரான் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருந்த இந்த படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி தற்போது வரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய மோகன்லால், தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். அதாவது மோகன்லாலிடம் நடிப்பதில் பிடிக்காத விஷயம் எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ஒரு நடிகருக்கு எந்த சாய்ஸும் கிடையாது. ஒரு ரோல் பிடிக்கலன்னா படமே பண்ண கூடாது. அத விட்டுட்டு எனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று சொல்லக்கூடாது. நடிப்பது ஒரு நட்பு மாதிரி. நட்பில் எல்லாம் படிக்க வேண்டும். எனக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. தன்மாத்ரா படத்தில் நான் நிர்வாணமாக நடிப்பது போன்ற காட்சி இருந்தது. நான் அந்த சீனில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் அந்த சீனுக்கே மதிப்பில்லை. கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிப்பேன்” என்று தான் நடித்திருந்த தன்மாத்ரா படத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார்.