இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 70 காலகட்டங்களில் இருந்து இன்று வரையிலும் இவருடைய தனித்துவமான இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தினை இயக்க இருக்கிறார். நீரவ் ஷா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார். இந்த படத்தினை கனெக்ட் மீடியா நிறுவனம் இளையராஜாவுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. அதாவது இளையராஜாவின் பயோபிக் படமாக உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் படம் தொடங்குவதற்கான வேலைகளும் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் மீண்டும் தள்ளிப்போகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நடிகர் தனுஷ் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு படம் இயக்குவதிலும் பிசியாக இருக்கிறார். எனவே இளையராஜாவின் பயோபிக் படம் தள்ளிப் போக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.