இயக்குனர் வெற்றிமாறன் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை பாகம் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ், கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, பவானி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனமும் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இசைஞானி இளையராஜா விடுதலை 2 படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் இளையராஜாவிற்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.