Homeசெய்திகள்சினிமாஇளையராஜா கவிஞர்களை மதிப்பதில்லை... எழுத்தாளர் ஜெயமோகன் வேதனை...

இளையராஜா கவிஞர்களை மதிப்பதில்லை… எழுத்தாளர் ஜெயமோகன் வேதனை…

-

தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா. 80-களில் தொடங்கி இன்று வரை அவரது பாடல்களை ஒலிக்காத ஊரும் இல்லை, நாடும் இல்லை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து தென்னிந்திய மொழிகளுக்கும், ஏன் இந்திய மொழிகளுக்கு கூட முடி சூட மன்னனாக விளங்குகிறார் இளையராஜா. முதியோர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைய சமுதாயமும் இவரது பாடல்களுக்கும், இசைக்கும் அடிமை என்று சொல்வதே நிதர்சனம்.

தற்போதும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இசை அமைத்து வருகிறார். அண்மையில் அவரது இசையில் வெளியான திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் சூரி நடிக்கிறார். தற்போது விடுதலை 2-ம் பாகத்திற்கு இசை அமைத்து வருகிறார். இதனிடையே, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவும் உருவாகிறது. இதில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். இதனிடையே இளையராஜா அடுத்தடுத்து புகார்கள் அளித்து வந்த வண்ணமே உள்ளார். அவர் மீது பலரும் தங்களின் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாடல் ஆசிரியர்களை இளையராஜா மதிப்பதில்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் இசை அமைப்பாளர்கள் பீடங்களில் அமர்ந்திருக்கக்கூடிய நபர்களாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார். அவர்களுக்கு சேவகம் செய்யும் பணியாளர்களாக பாடல் ஆசிரியர்கள் பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

MUST READ