Homeசெய்திகள்சினிமாகோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

-

இசைஞானி இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவர் தனது தனித்துவமான இசையின் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறார். தற்போது இவர் விடுதலை 2 திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் படை தலைவன் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இளையராஜா. இவருடைய இசையில் உருவாகி இருக்கும் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. இதற்கிடையில் இளையராஜா ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்திருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் வருகின்ற 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கோயில் கருவறையிலிருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா!இந்நிலையில் தான் இசைஞானி இளையராஜா, விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைந்தபோது அவர் அங்குள்ள பூசாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அர்த்தமண்டபடியின் அருகே நின்றவாறு கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார் இளையராஜா. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ