Homeசெய்திகள்சினிமா'முதலில் சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ'.... லிடியனிடம் நான் சொன்னது..... இளையராஜா விளக்கம்!

‘முதலில் சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ’…. லிடியனிடம் நான் சொன்னது….. இளையராஜா விளக்கம்!

-

- Advertisement -

லிடியன் நாதஸ்வரத்திடம் சிம்பொனி குறித்து நான் சொன்னது இதுதான் என இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார்.'முதலில் சிம்பொனின்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ'.... லிடியனிடம் நான் சொன்னது..... இளையராஜா விளக்கம்!

இசைஞானி என்று அன்று முதல் இன்று வரை கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருபவர் இளையராஜா. இவரது இசையால் மயங்காதவர்கள் எவரும் இலர். அந்த அளவிற்கு இவரது இசை 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட் தான். எனவே கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து சென்னை திரும்பி அவர், “82 வயதாகிவிட்டது இனி என்ன செய்யப் போகிறான் என்று யாரும் நினைக்காதீர்கள். இதுதான் ஆரம்பம்” என்று உற்சாகப் பேட்டி அளித்திருந்தார். இதற்கிடையில் லிடியன் நாதஸ்வரம் என்ற இளைஞனிடம் இசைஞானி இளையராஜா சிம்பொனி எழுத சொன்னார் என்பது தொடர்பான பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு இளையராஜா, “என்னிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக வந்த பையன் தான் லிடியன் நாதஸ்வரம். அப்போது அவர் ஒருமுறை நான் சிம்பொனி கம்போஸ் பண்ணி இருக்கிறேன் என்று என்னிடம் வந்து அதை போட்டு காட்டினார். 20 முதல் 30 நொடிகளுக்குப் பிறகு இது சினிமா பின்னணி மாதிரி இருக்கிறது. இது தப்பாச்சே. இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்போனின்னா என்னன்னு தெரிஞ்சுக்கோ. அதன் பிறகு அதை கம்போஸ் பண்ணு என்று சொன்னார். நான் அவரை வழிநடத்தினேன் அவ்வளவுதான்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

MUST READ