தனது சமீபத்திய வீடியோவால் இளையராஜா அதிக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார். இது தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மனோபாலா மறைவிற்கு பல திரைத்துறை பிரபலங்கள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இளையராஜா மனோபாலா மறைவை அடுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த அவர் “என்னுடைய கார் கடந்து செல்லும்போது என்னுடைய அப்பாய்ன்ட்மெண்டுக்காக ரோட்டில் காத்துக் கிடந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர்” என்று பேசியிருந்தார்.
அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாகியது. ஒரு பொது தளத்தில் பேசும்போது எப்படி பேச வேண்டும் என்று ஒரு பொது அறிவு கூட இல்லாமல் அவர் பேசியிருக்கிறார். ஒருவர் மறைவின் போது கூட இவ்வளவு தற்பெருமை தேவையா, பலர் மதிக்கும் இடத்தில இருக்கும் அவர் இப்படி பேசலாமா என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
#NikilNews23
Maestro @TheMaestroRaja Condolence Message about Dir @manobalam Demise… pic.twitter.com/gqRLcJNzxg— Nikil Murukan (@onlynikil) May 3, 2023