Homeசெய்திகள்சினிமாதமிழர்கள் வாழ்வை இசையால் நிறைத்த தங்கமகன்… இளையராஜா பிறந்ததின சிறப்பு பதிவு!

தமிழர்கள் வாழ்வை இசையால் நிறைத்த தங்கமகன்… இளையராஜா பிறந்ததின சிறப்பு பதிவு!

-

இசையின் ராஜா இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அவர் செய்த சாதனைகளை சொல்லி முடிக்க எழுத்துக்கள் போதாது. இருப்பினும் அவரைப் பற்றி சிறிதளவேனும் புகழ்ந்து நாமும் பெருமைப்பட்டு கொள்வோம்.

வாழ்வின் எல்லா தருணங்களுக்குமான இசையை ஒருவரால் கொடுக்க முடியுமானால் அது இளையராஜாவால் மட்டுமே முடியும். இசை என்பது உழைக்கும் வர்க்கத்தின் உடைமை என்ற நிலையை உருவாக்கியது தான் இசைஞானியின் உன்னதமான சாதனை.

எத்தனையோ இசை மேதைகள் உலவிய மண்ணில் தனக்கென ஒரு அழுத்தமான முத்திரையை உலக அரங்கில் பதித்தவர், பதித்துக் கொண்டே இருப்பவர் நம்முடைய இசைஞானி அவர்கள்.

அவர் சாதாரணமாக திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் அல்ல. இசையை மருந்தாக்கி சிகிச்சை அளித்திடும் மருத்துவர்.

இளையராஜா 1996 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தமிழ், மலையாளம், தெலுங்கு ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும் பத்மபூஷன் விருது, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்று இசையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நாட்டுப்புற இசை, நாடக இசை, மேற்கத்திய இசை போன்றவைகளில் புலமை வாய்ந்தவர்.


குழந்தைகளின் அழுகை சத்தம்,குலவை சத்தம் உறுமி சத்தம், கொலுசு சத்தம், வளையல் சத்தம், பறவைகளின் சத்தம், இலைகளின் சத்தம், மத்தள சத்தம், நாதஸ்வர சத்தம் இது போன்ற தமிழ் மண்ணோடும் தமிழர்களின் வாழ்வோடும் பின்னிப்பிணைந்துள்ள சத்தங்ளின் மூலம் அனைத்து ரசிகர்களையும் தனது இசையினால் உறைய வைக்கிறார்.

இவர் தனது ரசிகர்களுக்காக தனி இசை உலகத்தையே படைத்துள்ளார். தனது உணர்வுபூர்வமான இசை மழையில் அனைத்து ரசிகர்களையும் நனைய வைத்துவிடுவார். இன்று வரையிலும் இளையராஜாவின் இசை என்றால் கேட்பவர்களுக்கு ஒரு விதமான மனநிறைவைத் தந்துவிடும்.
திரை உலகில் பல இசையமைப்பாளர்கள் வந்து போன போதும் கூட தற்போது வரை அசைக்க முடியாத இசை ஆளுமையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான விடுதலை மற்றும் மாடர்ன் லவ் படங்களே அதற்கு சாட்சி.

இசை என்று சொன்னாலே நம் கண் முன் தோன்றுவது இசைஞானி இளையராஜா தான். இவ்வாறு இசை உலகில் இசை ராட்சஷனாகவும் முடி சூடா மன்னனாகவும் திகழும் இசைஞானி இளையராஜாவின் 80-வது பிறந்த நாளான இன்று நாமும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வோம்!

MUST READ