Homeசெய்திகள்சினிமாநான் அம்மா ஆகப்போறேன்... சமூக வலைத்தளங்களை அதிரச் செய்துள்ள இலியானா!

நான் அம்மா ஆகப்போறேன்… சமூக வலைத்தளங்களை அதிரச் செய்துள்ள இலியானா!

-

- Advertisement -

நடிகை இலியானா கூடிய விரைவில் தான் அம்மா ஆக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா. அவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ‘கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் ஜாலியாக சுற்றுலாக்கள் சென்று பொழுதைக் கழித்து வருகிறது.

இந்நிலையில் திடீரென தான் அம்மா ஆக இருப்பதாக இலியானா தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களை அதிரச் செய்துள்ளது. “விரைவில் வருகிறது. எனது குட்டி டார்லிங்கை காண மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இலியானாவின் காதலர் அல்லது கணவர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. நயன்தாரா போல வாடகை தாய் மூலம் அவர் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்-ன் 45 வயது சகோதரர் செபாஸ்டின் உடன் இலியானா டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்டது. கத்ரினா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்தில் கூட இருவரும் சேர்ந்து காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ