தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். அதன்படி கானா, சூப் சாங்ஸ், மெலடி போன்ற எல்லாவிதமான பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதே சமயம் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா ஆகியோரின் கூட்டணியில் ப. பாண்டி என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதைத்தொடர்ந்து மூன்றாவதாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் தனுஷின் அக்கா மகன் வருண் ண் கதாநாயகனாக நடிக்க அனிதா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர்களுடன் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நல்ல ஒரு பீல் குட் படமாக காதல் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வருகின்ற டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் 2024 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.