கவின் நடிப்பில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் கவின் ‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘ப்யார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் எழுதி இயக்குகிறார். இப்படம் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாக இருந்தது. ஹரிஷ் கல்யாண் இடம் பெற்ற பல போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான கவனம் அதிகரித்தது. பின்னர் சில காரணங்களால் ஹரிஷ் கல்யாண் படத்திலிருந்து விலகியுள்ளார்.
தற்போது இந்தப் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கே எழிலரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி கவனம் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் ஸ்பெஷல் ப்ரோமோ நாளை காலை 11.11 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது