Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2வில் நான் குறைவான காட்சிகளில் தான் தோன்றுவேன்'..... எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

‘இந்தியன் 2வில் நான் குறைவான காட்சிகளில் தான் தோன்றுவேன்’….. எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

-

நடிகர் எஸ்.ஜே. சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். 'இந்தியன் 2வில் நான் குறைவான காட்சிகளில் தான் தோன்றுவேன்'..... எஸ்.ஜே. சூர்யா பேச்சு!ஆரம்பத்தில் இவர் இயக்குனராகவும் ஹீரோவாகவும் வலம் வந்தாலும் தற்போது வில்லனாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வில்லன் என்றாலே எஸ்.ஜே சூர்யா தான் நினைவுக்கு வருகிறார். அந்த அளவிற்கு மாநாடு, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் வில்லனாக பட்டையை கிளப்பி இருப்பார். அதை தொடர்ந்து கேம் சேஞ்சர், வீர தீர சூரன், ராயன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. இதற்கிடையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். 'இந்தியன் 2வில் நான் குறைவான காட்சிகளில் தான் தோன்றுவேன்'..... எஸ்.ஜே. சூர்யா பேச்சு!இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கும் நிலையில் லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. அதேசமயம் இந்த படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி மும்பை, மலேசியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர், கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவர் பேசியதாவது, இந்தியன் 2 படத்தில் என்னுடைய போர்ஷன் குறைவாக தான் இருக்கும். ஆனால் அது சிறப்பாக இருக்கும். இந்தியன் 3 படத்தில் எனக்கும் கமல்ஹாசன் சாருக்கும் இடையில் ஹைலைட்டான ஒரு காம்பினேஷன் காட்சி இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் படமாக உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ