பிரபல இயக்குனர் சங்கர், கடந்த 1996 இல் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தை இயக்கியிருந்தார். லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு கொரோனா போன்ற காரணங்களால் தற்போது வரை படமானது ரிலீசாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில பாடல்கள் இன்னும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே இந்தப் படத்தை 325 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முடித்து தருவதாக நடிகர் சங்கர், தயாரிப்பாளரிடம் தெரிவித்திருந்தாராம். ஆனால் தற்போது 425 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் போய்க்கொண்டிருக்கிறதாம். இதற்கிடையில் கமல்ஹாசனுக்கான பாடல் ஒன்றை 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவ்வளவு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.