Homeசெய்திகள்சினிமாமூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த 'இந்தியன் 2'!

மூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘இந்தியன் 2’!

-

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. மூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த 'இந்தியன் 2'!இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்க லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இதில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் வெளியான நிலையில் முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அத்துடன் இந்தியன் 3 பட ட்ரெய்லரும் இந்தியன் 2 படத்தின் முடிவில் திரையிடப்பட்டு பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் மூன்று மணி நேரமாக இருந்த இந்தியன் 2 திரைப்படத்தின் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு தற்போது 2.40 நிமிடங்களாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த 'இந்தியன் 2'!அதே சமயம் இந்த படம் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் சொன்னது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படம் மூன்று நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ