Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு... படக்குழு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு...

இந்தியன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு… படக்குழு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

-

 ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தில் ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே, மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவரு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இந்தியன் முதல் பாகத்தில் கமல் பயன்படுத்திய வர்மக்கலை குறித்தும் முத்திரைகள் குறித்தும் தன்னிடம் ஆலோசனை கேட்கப்பட்டு, தன் பெயரும் படத்தில் இடம்பெற்றது. ஆனால், தற்போது இந்தியன் 2 படத்தில் முதலாம் பாகத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் முத்திரைகள் பயன்படுத்தப்பட்ட காட்சிகளும் உள்ளன. ஆனால், இது தொடர்பாக எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை, இதனால் படத்தை வெளியிட தடைவிதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து படக்குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

MUST READ