Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இது தானா?

‘இந்தியன் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இது தானா?

-

- Advertisement -

இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'இந்தியன் 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இது தானா?கடந்த 1996 இல் கமல், சங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து உருவான இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி மிக பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தியன் 2 திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரையிடப்பட்டது. ஆனால் படமானது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே இந்த படமானது வெளியான நாள் முதலே கலையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் பின்தங்கி உள்ளது. 'இந்தியன் 2' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இது தானா?இருப்பினும் இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதியில் இடம் பெற்ற இந்தியன் 3 ட்ரைலர் ரசிகர்களுக்கு மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ