Homeசெய்திகள்சினிமாதாத்தா வராரு... தாத்தா வராரு... விரைவில் வெளியாகும் 'இந்தியன் 2' பட பாடல்!

தாத்தா வராரு… தாத்தா வராரு… விரைவில் வெளியாகும் ‘இந்தியன் 2’ பட பாடல்!

-

கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் நடிகர் கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தாத்தா வராரு... தாத்தா வராரு... விரைவில் வெளியாகும் 'இந்தியன் 2' பட பாடல்!இந்த படம் ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இதில் சேனாதிபதி (இந்தியன் தாத்தா) கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். தாத்தா வராரு... தாத்தா வராரு... விரைவில் வெளியாகும் 'இந்தியன் 2' பட பாடல்!இந்த படத்தில் கமல் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்னின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகி வரும் இந்த படமானது கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா போன்ற காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது. பின்னர் ஒரு வழியாக படப்பிடிப்பு முழுவதையும் முடித்த படக்குழுவினர் இந்தியன் 2 படமானது 2024 ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்துவிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. தாத்தா வராரு... தாத்தா வராரு... விரைவில் வெளியாகும் 'இந்தியன் 2' பட பாடல்!அதன்படி தாத்தா வாராரு தாத்தா வராரு எனும் வரிகள் அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஏற்கனவே சென்னை லூப் சாலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் சுவர்களில் இந்தியன் தாத்தாவின் படம் வரைந்து பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. ஆகவே தாத்தா வராரு பாடல் அந்த பாடலாக கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வழியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ