Homeசெய்திகள்சினிமாதுபாய் நடுவானில் இந்தியன் 2 புரமோசன்... உலகம் முழுவதும் தூள் கிளப்பும் படக்குழு....

துபாய் நடுவானில் இந்தியன் 2 புரமோசன்… உலகம் முழுவதும் தூள் கிளப்பும் படக்குழு….

-

ஜூலை 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் இரண்டாம் பாகம். ஷங்கர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து உள்ளது. படத்திற்கு அனிருச் இசை அமைத்துள்ளார். மேலும், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், விவேக், சித்தார்த், பிரியா பவானி சங்கர், மனோபாலா, எஸ்ஜே சூர்யா, உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் மொழி மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. மேலும், இதுவரை மூன்று பாடல்கள் படத்திலிருந்து வெளியாகி உள்ளன

இதனிடையே இந்தியன் இரண்டாம் பாகத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மும்பை, சிங்கப்பூர், துபாய் என மாறி மாறி படக்குழு படத்திற்கான புரமோசன் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, துபாய் நடுவானில் இந்தியன் 2 படத்திற்கான புரமோசன் செய்யப்பட்டது. ஸ்கை டைவிங் வீரர்கள் இந்தியன் 2 பட போஸ்டரை நடுவானில் பறக்கவிட்டு, அலங்கரித்தனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

MUST READ