Homeசெய்திகள்சினிமாசேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்ட 'இந்தியன் 2' படக்குழு!

சேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்ட ‘இந்தியன் 2’ படக்குழு!

-

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கியிருந்த திரைப்படம் தான் இந்தியன். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்ட 'இந்தியன் 2' படக்குழு!ஏ ஆர் ரகுமானின் இசையில் படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்து இன்றுவரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தில் இரண்டாம் பாகத்தை சங்கர் உருவாக்கினார். அதன்படி கமல், சித்தார்த் ,எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் என பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் அனிருத்தின் இசை ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்தியன் 2 படத்தில் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரில் சேனாபதியின் தந்தையின் கதை இடம்பெற்றுள்ளது. அதாவது சேனாபதியின் தந்தை வீரசேகரனாக நடித்திருக்கும் கமல் டி ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளமையான தோற்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளார். வீரசேகரனாக நடித்துள்ள கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார்.சேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்ட 'இந்தியன் 2' படக்குழு! 1800 காலகட்டத்தில் சுதந்திரத்திற்கு முன்பாக ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் இந்தியா எப்படி இருந்தது? இந்தியர்கள் எப்படி அடிமைப்படுத்தப்பட்டார்கள்? அப்போது இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே ஏற்பட்ட போர்களை பின்னணியாக கொண்டு இந்தியன் 3 உருவாகியுள்ளது. அதில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் போராளியாக வீரசேகரன் தோன்றுகிறார். இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தாலும் இந்தியன் 3 ட்ரெய்லர் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் படக்குழு வீரசேகரனின் போஸ்டரை வெளியிட்டு இந்தியன் 2 பட இறுதியில் இந்தியன் 3 ட்ரைலரை காண தவறாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. சேனாபதியின் தந்தை வீரசேகரனின் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ