இந்தியன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் சமீபத்தில் இந்தியன் 3 படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதாவது படக்குழுவினரிடம் இந்தியன் 2விற்காக படமாக்கப்பட்ட காட்சிகளில் 6 மணி நேர காட்சிகள் கைவசம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனை வைத்து இந்தியன் மூன்றாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தின் கிளைமாக்சிலும் கூட இந்தியன் 3 படத்தின் குறியீடு இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் ஒரு வருட இடைவெளியில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அப்டேட்டுகள் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் க்கு பிறகு தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.