Homeசெய்திகள்சினிமா28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் ரி ரிலீஸ்... திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்...

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் ரி ரிலீஸ்… திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

-

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் இரண்டாம் பாகம், இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கும் புதிய படத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தை ஜூலை மாதத்தில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியன் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுக்கு முன்பாக படக்குழு புதிய திட்டம் வகுத்தது. அதன்படி, இந்தியன் முதல் பாகத்தை ரி ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்தார். அவரது தயாரிப்பில் உருவான கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி வசூலில் கலக்கியது. இதனால், மற்றொரு ஹிட் திரைப்படமான இந்தியன் படத்தையும் ரி ரிலீஸ் செய்வதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

https://x.com/i/status/1798953653572645123

அதன்படி இந்தியன் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திரையரங்குகளில் ஆடிப்பாடியும், பட்டாசு வெடித்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

https://x.com/i/status/1798925249238761928

MUST READ