Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸ் ஆகும் 'இந்தியன்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரீ ரிலீஸ் ஆகும் ‘இந்தியன்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

இந்தியன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரீ ரிலீஸ் ஆகும் 'இந்தியன்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 1996 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கியிருந்தார். இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரான அரசியல்வாதிகளை கொலை செய்யும் சேனாதிபதி தாத்தாவாகவும் லஞ்சம் வாங்கும் இளைஞனாகவும் நடித்திருந்தார். இந்தப் படம் அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. அந்த அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் இந்தியன். ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. ரீ ரிலீஸ் ஆகும் 'இந்தியன்'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில் 28 வருடங்களுக்கு பிறகு இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதன்படி இந்தப் படம் 2024 நாள் ஜூன் 7-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் 2024 ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ