Homeசெய்திகள்சினிமாமீண்டும் சந்தித்த இந்தியன் பட ஜோடி... புகைப்படம் வைரல்...

மீண்டும் சந்தித்த இந்தியன் பட ஜோடி… புகைப்படம் வைரல்…

-

 
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி பெரும் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் இந்தியன். இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்தார். மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, சுகன்யா, கவுண்டமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே வெளியானது.
ஷங்கர் இயக்கத்தில் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசனே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதில், கமலுடன் இணைந்து, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா உள்பட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்து உள்ளது.
இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், புரமோசன் பணிகளில் தீவிரமாக களமிறங்கி இருக்கும் நடிகர் கமல்ஹாசனை, பிரபல நடிகை மனிஷா கொய்ராலா சந்தித்துள்ளார். இருவரும் இந்தியன் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகிறது.

MUST READ