Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 புரமோசன் பணிகள் தொடக்கம்... அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாரான படக்குழு...

இந்தியன் 2 புரமோசன் பணிகள் தொடக்கம்… அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாரான படக்குழு…

-

இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோசன் பணிகள் தொடங்கியுள்ளன. 
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் இரண்டாம் பாகம், இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர அன்பறிவு மாஸ்டர்கள் இயக்கும் புதிய படத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். இதில் இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு முடிந்த நிலையில், இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.

ஷங்கர் இயக்கியிருக்கும் இரண்டாம் பாகத்தில் கமலுடன் சித்தார்த், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன. அண்மையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது

அந்த வகையில், படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. அதன்படி, மும்பையில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் டிரைலர் வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்தடுத்து உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு சென்று படத்தை புரமோசன் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம்.

MUST READ