Homeசெய்திகள்சினிமாதேசிய திரைப்பட விருதுகள்... இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் அதிரடி நீக்கம்...

தேசிய திரைப்பட விருதுகள்… இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் அதிரடி நீக்கம்…

-

- Advertisement -
தேசிய விருது விழாவில் இருந்து இந்திரா காந்தி மற்றும் நர்கிஸ் தத் ஆகியோரின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளன.
இந்திய சினிமாவில் திரைத்துறையினரை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் ஒவ்வொரு ஆண்டும், தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய விருது வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர்., தமிழில் கடைசி விவசாயி, உள்ளிட்ட படங்கள் விருதுகளை அள்ளிச் சென்றன.

இந்த ஆண்டு 2023-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஆண்டுதோறும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது இந்திரா காந்தி பெயரிலும், அதேபோல தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படத்திற்கான விருது நர்கிஸ் தத் பெயரிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த இரண்டு விருதுகளும், அந்த பெயர்களின் கீழ் வழங்கப்பட மாட்டாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை பெறு நபருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த தொகை தற்போது 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

MUST READ