Homeசெய்திகள்சினிமாஇண்டஸ்ட்ரி ஹிட்..... 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'புஷ்பா 2'!

இண்டஸ்ட்ரி ஹிட்….. ‘பாகுபலி 2’ வசூல் சாதனையை முறியடித்த ‘புஷ்பா 2’!

-

- Advertisement -
kadalkanni

புஷ்பா 2 படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.இண்டஸ்ட்ரி ஹிட்..... 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'புஷ்பா 2'!

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் புஷ்பா 2 – தி ரூல். மாஸான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த படத்தினை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இண்டஸ்ட்ரி ஹிட்..... 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'புஷ்பா 2'! கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற புஷ்பா 1 திரைப்படத்தை தொடர்ந்து வெளியான புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் வெளியான முதல் 6 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்தது. அடுத்தது ரூ. 2000 கோடியை டார்கெட் செய்துள்ள புஷ்பா 2 திரைப்படம் 32 நாட்களில் ரூ. 1831 கோடியை கடந்திருப்பதாக படக்குழு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இண்டஸ்ட்ரி ஹிட்..... 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'புஷ்பா 2'!இதன் மூலம் புஷ்பா 2 திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்து உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் லிஸ்டில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கனவே இந்த படம் 56 நாட்களைக் கடந்து தான் ஓடிடியில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆகையினால் இனிவரும் நாட்களில் 2000 கோடியை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ