Homeசெய்திகள்சினிமாசர்வதேச கேரள திரைப்பட விழா.... மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்..

சர்வதேச கேரள திரைப்பட விழா…. மணிக்கணக்கில் நின்று டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்..

-

28-வது கேரள சர்வதேச திரைப்பட விழா கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நானா படேகர், மற்றும் கென்ய இயக்குநர் வனுரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்க முடியாத நிலையில், அவர் பேசிய வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், இஸ்ரேல் – பாலஸ்தீன போர் பிரச்சனையில், பாலஸ்தீனத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தும் இந்தியாவின் முதல் திரைப்பட விழாவாக இவ்விழா அமையும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நானா படேகர், மலையாள சினிமாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். விழாவில் கென்ய இயக்குநர் வனுரி கஹியுவுக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் சினிமா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இத்திரைப்பட விழாவில் மொத்தம் 81 நாடுகளைச் சேர்ந்த 175 படங்கள் 6 திரையரங்குகளிில் உள்ள 11 திரைகளில் திரையிடப் பட உள்ளன. இந்த விழாவில் முதலாக இயக்குநர் ஜியோ பேபி இயக்கி மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவான காதல் தி கோர் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

கேரளாவின் புகழ்பெற்ற தாகூர் திரையரங்கில் பல்வேறு நாடுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதனால், சினிமா டிக்கெட் வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ