Homeசெய்திகள்சினிமாஏ.ஆர்.ரஹ்மான் இப்படிப்பட்டவரா..? உண்மைகளை போட்டுடைத்த மனைவி சாய்ரா..!

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படிப்பட்டவரா..? உண்மைகளை போட்டுடைத்த மனைவி சாய்ரா..!

-

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்த தகவல்தான் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது.ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு விவாகரத்து ..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மாந் சாய்ரா வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள் என பலருடன் சாய்ராவும் பங்கேற்று இருந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய சாய்ரா பானு, முதல்முறையாக பேசுவதால் மிகவும் பதட்டமாக உள்ளது” என கூற, உடனடியாக நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகை சுஹாசினியிடம், “சாய்ரா பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார்” என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவிப்பார்.7வது முறை தேசிய விருதை வென்ற ஓயாத இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்.... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அடுத்து ரஹ்மானை முதன் முதலில் சந்தித்தது பற்றி சாய்ரா, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் அம்மா, சகோதரிகளுடன் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். வீட்டில் என்னைப் பார்த்துவிட்டு நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டார். நான் அதற்கு ஓகே என்று சொன்னேன். காரணம் அது என் பெற்றோர்களின் விருப்பமாக இருந்தது” என தெரிவித்தார்.

அவரிடம் வேறு எதுவும் கேள்விகள் எல்லாம் கேட்காமல் எப்படி நீங்கள் ஓகே சொன்னீர்கள் என்கிற கேள்விக்கு சாய்ரா, “நான் அவரிடம் 2 விஷயங்கள் மட்டும் தான் கேட்டேன். ஒன்று ஆங்கிலத்தில் பேச தெரியுமா?, இரண்டாவது கார் ஓட்டுவீர்களா? என்றுதான் என்னுடைய கேள்விகள் இருந்தது” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “அப்போது நான் ரொம்ப குழப்பத்தில் இருந்தேன். ஆனால் அந்த காலகட்டம்தான் திருமணம் செய்து கொள்வதற்கு சரியான நேரம் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் என்னுடைய மனைவிக்கு வாழ்க்கையில் ஆதரவாக இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு அம்மாவாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்படி எல்லோர் முன்னிலையிலும் தோன்ற வேண்டும் என எல்லாவற்றையும் சாய்ரா தான் முடிவு செய்வார். சொல்லப்போனால் ஒரு குடும்பத்தில் பல விஷயங்கள் பொய்யாக தெரியலாம். அது கட்டுப்படுத்த ஒரு நல்ல வழி ஒன்று உள்ளது. குடும்பத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது நல்ல அன்பு காட்டுவோம். கடவுளுக்காக அனைத்தும் செய்வோம். அதன் நோக்கம் சிறந்தது. நாங்கள் ஒன்று சேர்ந்து கடவுளுக்காக பிரார்த்தனை செய்வோம். நான் கடவுளுக்காக தான் இசையமைக்கிறேன். சாய்ரா என்னுடைய பாடல்கள் குறித்து விமர்சனம் செய்வார். சாய்ராவுக்கு பாரம்பரிய பாடல்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது.மறைந்த பாடகர்களை AI தொழில்நுட்பத்தால் உயிர்பெறச் செய்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்!

எங்கள் இருவருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் சண்டையே வராது. ஒருவேளை வந்தால் சாய்ரா தான் சாரி சொல்வார்’’ எனத் தெரிவித்து இருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அடுத்து பேசிய சாய்ரா, ‘‘சமீபகாலமாக இரவு 12 மணிக்கு என்னை பைக்கில் ஹெல்மெட் கூட இல்லாமல் ரைடு கூட்டிச் செல்கிறார். நானும் பைக்கில் அழைத்து செல்லும் கணவரை தான் எதிர்பார்த்தேன். ஏ.ஆர்.ஹ்மான் ஒரு அற்புதமான நல்ல மனிதர். அடக்கமானவர், நல்ல தந்தை, மிகவும் இனிமையானவர், நகைச்சுவை குணமுடையவர், அப்பாவும் கணவராகவும் அன்பானவர், உலகின் சிறந்த மகன்”என சாய்ரா ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்து தள்ளியிருப்பார்.

MUST READ