Homeசெய்திகள்சினிமாஇரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?

இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?

-

நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?பிரபல நட்சத்திர ஜோடியாக அறியப்படுபவர்கள் விராட் கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதியினர். ஷாருக்கான் நடிப்பில் 2008 இல் வெளியான ரப் நே பனா தி ஜோடி படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா ஷர்மா அதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கும் விராட் கோலி உடன் காதலில் இருப்பதாக அறிவித்தார். அதை தொடர்ந்து அனுஷ்கா ஷர்மாவுக்கும், விராட் கோலிக்கும் கடந்த டிசம்பர் 11, 2017 ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு வாமிகா எனப் பெயரிட்டனர். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா இரண்டாவது குழந்தைக்கு தாயாக உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த மகிழ்ச்சியான செய்தியை விராட் கோலியின் நெருங்கிய நண்பரும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் பகிர்ந்துள்ளார். இரண்டாவது குழந்தைக்கு தாயாகப் போகிறாரா நடிகை அனுஷ்கா ஷர்மா?இதனால் விராட் கோலி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாகவும் ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது பற்றி நடிகை அனுஷ்கா ஷர்மா எந்த தகவலையும் வெளியிடவில்லை. விரைவில் அவரும் இது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ