Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறதா அஜித்தின் 'குட் பேட் அக்லி'?

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறதா அஜித்தின் ‘குட் பேட் அக்லி’?

-

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறதா அஜித்தின் 'குட் பேட் அக்லி'?மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமீபத்தில் படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் அஜித் தற்போது நடித்துவரும் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 பொங்கலுக்கு தான் வெளியாகும் என இந்த படம் அறிவிக்கப்பட்ட போதே அறிவிப்பு போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டதால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதாவது மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிறதா அஜித்தின் 'குட் பேட் அக்லி'?ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் படக்குழுவினர் சார்பில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ