Homeசெய்திகள்சினிமா'புறநானூறு' படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்க போவது இவர்தானா?

‘புறநானூறு’ படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்க போவது இவர்தானா?

-

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதனால் மீண்டும் சுதா கொங்கரா, சூர்யாவை இயக்கத் திட்டமிட்டார். 'புறநானூறு' படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்க போவது இவர்தானா?அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டது. சூர்யாவின் 43வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சூர்யாவே தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தி திணிப்பு சம்பந்தமான கதைக்களத்தில் இந்த படம் உருவாகப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. ஆனால் அரசியல் காரணங்களால் இந்த படத்தின் கதையை மாற்றும்படி சூர்யா, சுதா கொங்கராவிடம் சொல்ல, அதற்கு சுதா கொங்கரா மறுத்து விட்டதாகவும், இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 'புறநானூறு' படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்க போவது இவர்தானா?எனவே புறநானூறு படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சுதா கொங்கரா, சூர்யா இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட போது புறநானூறு படம் அல்லாமல் வேறொரு ப்ராஜெக்டை இருவரும் இணைந்து பண்ணலாம் என்று சூர்யா, சுதா கொங்கராவிடம் சொன்னாராம். ஆனால் அதற்கு சுதா கொங்கரா புறநானூறு திரைப்படம் தான் என்னுடைய அடுத்த படம். நீங்கள் ஹீரோவாக நடிக்கவில்லை என்றால் வேறொரு நடிகரை நடிக்க வைப்பேன் என்று சொல்லிவிட்டாராம். இது ஒரு பக்கம் இருக்க சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகர் ஒருவர் ஆர்வம் காட்டி வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான். 'புறநானூறு' படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்க போவது இவர்தானா?சூர்யா புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டதால் தனுஷ் அப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எனவே சூர்யாவை விட, நடிகர் தனுஷ் கல்லூரி மாணவனாக நடிப்பதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ