Homeசெய்திகள்சினிமாவிஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இவரா?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இவரா?

-

தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப்போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இவரா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், தற்போது அரசியல்வாதியாகவும் களம் இறங்கியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் பாடகராகவும் வலம் வரும் நிலையில் இவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான நாள் முதலே ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி துருவ் விக்ரம், கவின் போன்றோரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் படமானது கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க போவது இவரா?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ஜேசன் சஞ்சய் இயக்கப் போகும் அந்த ஹீரோ யார் என்றால் அது வேறு யாருமில்லை நடிகர் சூரி தான் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் நுழைந்து தற்போது கருடன் திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறி இருக்கும் சூரி, ஜேசன் சஞ்சயின் கதைக்குப் பொருத்தமானவர் என்று புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ