குட் பேட் அக்லி படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அஜித், மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்த வருகிறார். அஜித்தின் 63வது படமான இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. அடுத்தது இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் பிரசன்னா, இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது அர்ஜுன் தாஸும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே நடிகர் பிரசன்னா, அஞ்சாதே போன்ற பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அடுத்ததாக இவர் அஜித்துக்கு வில்லனாக நடிகை இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கி உள்ளது.