Homeசெய்திகள்சினிமா'சூர்யா 46' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

‘சூர்யா 46’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

-

- Advertisement -

சூர்யா 46 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'சூர்யா 46' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அடுத்தது 2025 மே மாதம் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.'சூர்யா 46' படத்தின் இசையமைப்பாளர் இவரா? சூர்யாவின் 45வது படமான இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் சூர்யா. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் 2025 மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. 'சூர்யா 46' படத்தின் இசையமைப்பாளர் இவரா?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ஜிவி பிரகாஷ், இந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது மாருதி காரின் புகழ்பெற்ற 796CC எஞ்சின் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகப் போவதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ