நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இதற்கிடையில் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. தக் லைஃப் படத்திற்கு பின்னர் தான் STR48 திரைப்படம் தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க சிம்புவின் 50 ஆவது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதனால் சுதா கொங்கராவும் ஏற்கனவே கமிட்டாகியுள்ள படங்களை முடித்த பின்னர் சிம்புவை இயக்குவார் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் STR50 படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -