Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் இவர்தான் வில்லனா?

‘தளபதி 69’ படத்தில் இவர்தான் வில்லனா?

-

தளபதி 69 படத்தின் வில்லன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'தளபதி 69' படத்தில் இவர்தான் வில்லனா?

நடிகர் விஜய் தற்போது ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் வலம் வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருக்கிறார். ஆகையினால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாகவும் அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் இவருடைய நடிப்பில் உருவாகி இருந்த கோட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் சமந்தா, மோகன்லால் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. 'தளபதி 69' படத்தில் இவர்தான் வில்லனா?இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தளபதி 69 படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ