உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய அடி வாங்கியது. அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 18) சென்னை, சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனுக்கு சங்கர் மேல் இவ்வளவு கோபமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் கமல்ஹாசனின் கடைசி படத்திற்கு முந்தைய படமான விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜையும், அடுத்த படத்தின் இயக்குனரான மணிரத்னத்தையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த கமல்ஹாசன் ஏன் சங்கரை அழைக்கவில்லை? இந்தியன் 2 படத்தின் தோல்வியின் காரணமாக தான் ஷங்கரை, கமல்ஹாசன் விழாவிற்கு அழைக்கவில்லையா? என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வியினால் கமல்ஹாசனுக்கும், இயக்குனர் சங்கருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் இந்தியன் 3 திரைப்படத்தை தக் லைஃப் படத்திற்கு பின்னர் ரிலீஸ் செய்ய வேண்டுமென ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் கமல். இருப்பினும் என்னதான் கோபமாக இருந்தாலும் இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குனர் சங்கரை அழைக்காமல் தனது கோபத்தை இப்படி பொழுது வெளியில் காட்டி விட்டாரே என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.