Homeசெய்திகள்சினிமாகவின் வாழ்க்கையில் இப்படி ஒரு ட்விஸ்டா..... வெளியான புதிய தகவல்!

கவின் வாழ்க்கையில் இப்படி ஒரு ட்விஸ்டா….. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் கவினின் வருங்கால மனைவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். அதேசமயம் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரும் அந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சக போட்டியாளர் லாஸ்லியாவும் காதல் பறவைகளாக வலம் வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இடையில் லாஸ்லியாவின் தந்தை நிகழ்ச்சிக்குள் வந்து இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் இருவரின் காதல் தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருந்தது. பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு ஒரு சில கருத்து வேறுபாடுகளால் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் லாஸ்லியாவும் தான் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. மேலும் கவினின் வருங்கால மனைவி மோனிகா டேவிட்டின் புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டன.

இந்நிலையில் மோனிகா டேவிட் என்பவர் லாஸ்லியாவின் தோழி என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லாஸ்லியாவின் ஸ்டைலிஷ்ட்டாக இவர் பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ்லியா மற்றும் மோனிகா டேவிட் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பர்வது மட்டும் அல்லாமல் கவின் வாழ்க்கையில் இப்படி ஒரு டிவிஸ்டா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ