நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் மகள்தான் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அடுத்தது இவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார். அதன்படி இவர் அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகி இருக்கும் பேபி ஜான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனது நீண்ட கால காதலன் ஆண்டனி தட்டில் உடன் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வந்தன. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. ஏனென்றால் ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ், ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடிஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் புதிதாக எந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகவில்லை. இதன் மூலம் அவர் சினிமாவை விட்டு விலக்குகிறாரா? அல்லது திருமணத்திற்கு பின்னர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.